2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

இராணுவ கென்ரர் வாகனம் மோதி ஒருவர் காயம்: சந்திவெளியில் சம்பவம்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அணுருத்தன்)

மட்டக்களப்பு - கொழும்பு வீதியில் உள்ள சந்திவெளியில் இன்று காலை இராணுவ கென்ரர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதால் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் படுகாயமடைந்த நிலையில் சந்திவெளி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

பாடசாலை வீதி சந்திவெளியைச் சேர்ந்த கிருஸ்னபிள்ளை செயோன் வயது 26 என்பவரே இவ்வாறு விபத்துககுள்ளாகி உள்ளார். இவர் பிள்ளையார் கோயிலின் செயலாளர் மற்றும் ஆலய பணிவிடை சம்பந்தமாக மட்டக்களப்புக்கு செலும் வழியிலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .