Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
தமிழ் மக்கள் கையேந்துபவர்களாகவும் யாரையும் எதிர்பார்ப்பவர்களாகவும் இருப்பார்களாயின் அவர்கள் தங்களது குடும்ப சுமையினை சுமக்கவும் முடியாது. அவர்களது பிள்ளைகளையும் கரை சேர்க்கமுடியாது தொடர்ந்தும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட மண்டூர் பகுதியில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிழக்கு மாகாணசபை மூலம் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் சிறி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அமைப்பாளருமான பூ.பிரசாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது மண்டூர் பகுதியில் வெள்ள அனர்த்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இரண்டு கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதி மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைத்து உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'ஒவ்வொருவருடமும் வெள்ளப்பெருக்குவரும்போது நிவாரணத்துக்கு கையேந்தும் சமூகமாகவே எமது சமூகம் உள்ளது. அந்த நிலை இனி இருக்கக்கூடாது.
தொடர்ந்து நாங்கள் கையேந்துபவர்களாகவும் யாரையும் எதிர்பார்ப்பவர்களாகவும் இருப்போமானால் எமது குடும்ப சுமையினை சுமக்கவும் முடியாது எமது பிள்ளைகளையும் கரை சேர்க்கமுடியாது தொடர்ந்து தமிழ் மக்கள் இவ்வாறானதொரு நிலையில் இருக்கவேண்டியேவரும்.
எங்களுக்குள் சேமிப்புப்பழகத்தை நாங்கள் ஊட்டிக்கொள்ளவேண்டும். இதில் உங்களது தவறு மட்டுமில்லை எங்களது தவறும் உள்ளது. இது எமது அரசியல் தலைமைகள் கடந்த காலத்தில் விட்ட பிழை. எல்லாவற்றுக்கும் எல்லாவற்றையும் கொடுத்துகொடுத்து பழக்கிவிடப்பட்டுள்ளது. அதேபோன்று யுத்தமும் நாம் சேமிப்பை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை எமக்கு தரவிரல்லை.
ஆகவே இனியாவது நாங்கள் சிந்திக்கவேண்டும் நாங்களே உழைக்கவேண்டும் நாங்களே வாழவேண்டும் நாங்கள் சேமிக்கவேண்டும் எமது பிள்ளைகளை படிப்பிக்கவேண்டும்,தொடர்ந்து எமது பிள்ளைகளை தொடர்ந்தும் வயல்களிலும் மீன்பிடிக்கவும் அனுப்பிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்காமல் எமது பிள்ளைகளை படிப்பித்து எமது பிரதேசத்தை நாங்கள் அபிவிருத்தி செய்ய முலவேண்டும்' என்றார்.
41 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago