2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

பொலித்தீன் பையினுல் சுருட்டிக்கட்டிய நிலையில் சடலம் மீட்பு

Super User   / 2011 பெப்ரவரி 27 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் புதிய பனிச்சையடியிலுள்ள மதகு ஒன்றினுள் பொலித்தீன் பையினுல் சுருட்டிக்கட்டிய நிலையில் சடலமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பொலிஸாருக்கு பொலித்தீன் பையினுல் சந்தேகத்திற்கிடமான பொருள் மதகினுள் வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சோதனையின் போதே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று மாலை சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு பதில் நீதிபதி வி.எம்.சியாம் விசாரணைகளை மேற்கொண்டார்.

இதுவரை குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--