Kogilavani / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
சுவிஸ் நாட்டில் உள்ள கிழக்கு மாகாண மக்களின் நிதியுதவியுடன் செயற்பட்டுவரும் 'உதயம் கிழக்கு' அமைப்பினர் உதவும் கரங்கள் திட்டத்தின் கீழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றது.
இதனடிப்படையில் படுவான்கரைப் பிரதேசத்தின் போரதீவு பற்று மற்றும் பட்டிப்பளை கல்வி வலயத்தில், புலமை பரிசில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து அவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பண உதவிகளை வழங்கிவைத்தது.
போரதீவு பாரதி வித்தியாலயத்தில் 'உதயம் கிழக்கு' அமைப்பின் பொருளாளர் துரையின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.
ஆன்மிக சக்ரவர்த்தி விஸ்வப்பிரம்ம ஸ்ரீ வை.எஸ்.காந்தன்குருக்கள், பட்டிருப்பு உதவிக் கல்விப்பணிப்பாளர் நித்தியானந்தன், போரதீவுப்பற்று கோட்டக்கல்விப்பாளர், பட்டிப்பளை கோட்ட கல்வி பணிப்பாளர் இந் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், வங்கியில் பணம் இடப்பட்ட வங்கி புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் இப்பகுதியில் செயற்பட்டுவரும் அறநெறி பாடசாலைக்கு ஒரு தொகை பணம் வழங்கப்பட்டதுடன் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பணவு திட்டம் ஒன்றும் உதயம் கிழக்கு அமைப்பால் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026