2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

ஜேர்மன் அபிவிருத்தி கூட்டுத்தாபன பிரதிநிதிகள் குழு மட்டு. விஜயம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 09 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

ஜேர்மன் அபிவிருத்தி கூட்டுத்தாபன பிரதிநிதிகள் குழு நாளை வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

வர்த்தக, கைத்தொழில் விவசாய சம்மேளனத்திற்கு நிதி அமைச்சின் ஆலோசனையின் கீழ் விஜயம் செய்யவுள்ள இவர்கள்,  சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களினுடைய தொழில்த்துறைகளின் போக்குகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இவர்கள்  கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக, கைத்தொழில் விவசாய சம்மேளனத் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X