2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாணத் தமிழ் இலக்கிய விழா மட்டக்களப்பில்

A.P.Mathan   / 2011 ஜூன் 17 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.குருநாதன்)

கிழக்கு மாகாண கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சு ஆண்டு தோறும் நடத்திவரும் கிழக்கு மாகாணத் தமிழ் இலக்கிய விழா எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16, 17, 18ஆம் திகதிகளில் மட்டக்களப்பு நகரில் நடத்தப்படவிருக்கின்றது.

மாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் சி.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாணப் பண்பாட்டுத் திணைக்களத்தின் கலாசார உத்தியோகத்தர் க.அன்பழகன் தெரிவித்தார்.

விழா நடத்துவற்குரிய இடங்களாக மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் விருது மற்றும் 2010ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இலக்கிய நூல்களில் சிறந்தவைக்கு இலக்கிய நூற்பரிசு வழங்கல் ஆகியனவும் விழாவில் இடம்பெறும். கடந்த ஆண்டு இவ்விழா திருகோணமலையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .