Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜூன் 22 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
ஜோர்தானிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் கிழக்கு மாகாணத்திலிருந்து 200 பெண்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜோர்தானிலுள்ள நதிஸானி ரவல்ஸ் அண்ட் ருவல்ஸ் நிறுவனத்தினருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்திலிருந்து 200 பெண்களுக்கு ஜோர்தானிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
ஜோர்தானிலுள்ள இலங்கை தொழிற்றுறைத் திணைக்களம் மற்றும் இலங்கை வேலை வாய்ப்பு பணியகத்தின் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் என்ற வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
26 minute ago
35 minute ago
1 hours ago
ibnuaboo Thursday, 23 June 2011 01:31 AM
பலாத்காரமாக எமது பெண்களின் கற்பை சூறையாடிய கயவர்கள் இருக்கும் ஜோர்தான் ஆடைத் தொழிற்சாலைகளுக்கு மேலும் எமது பெண்களை அனுப்பி அவர்களது கற்புக்கு பங்கம் ஏற்படுத்தாதீர்கள் .ஆடை தொழிற்சாலை என்றால் பெண்களின் ஆடைகளை களைவது என்றா அர்த்தம்.
Reply : 0 0
ruthra Thursday, 23 June 2011 08:42 PM
ஜோர்தானில் தொழில் வாய்ப்பை பெற்று கொடுப்பதற்கு பதிலாக அந்த வாய்ப்பை இலங்கையிலே ஏற்படுத்திக் கொடுக்கலாமே? இவர்களுக்கெல்லாம் எப்படியாவது வெளிநாட்டு வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இவர்களுக்கு எங்கே தெரிய போகிறது பெண்களும் அனுபவிக்கும் இன்னல்கள்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
1 hours ago