2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

போசாக்கு உணவு பழக்கத்தை வலியுறுத்தி பேரணி

Kogilavani   / 2011 ஜூலை 18 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)
யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்காப்பட்ட மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில்    போசாக்கு உணவுப் பழக்கத்தை வலியுறுத்தி பேரணியொன்று நடைபெற்றது.

வேள்ட் விசன் நிறுவனம் பட்டிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பணிமனையுடன் இணைந்து இப்பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.
இப்பேரணியில், வேள்ட விசன் திட்ட இணைப்பாளர், சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் கே.ஸ்ரீநாத், கோட்ட கல்வி அதிகாரி ஸ்ரீதரன், பொது மக்கள், பாடசாலை மாணவர்கள், பாடசாலை அதிபர்கள், சுகாதாரத்துறை சார்ந்தோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, போசாக்கை வலியுறுத்தும் விழிப்புணர்வு கண்காட்சியும் இடம்பெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .