Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 16 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கலந்துகொண்ட சிவில் பாதுகாப்புக்குழு உயர்மட்ட மாநாட்டில், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படாததால் பா.அரியநேத்திரன் எம்.பி கடுமையான கண்டனத்தை தெரிவித்து தமக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழைத் தூக்கி வீசி போராட்டம் நடத்தினார்.
அதையடுத்து, உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன, முன்கூட்டியே வேறு முக்கிய பிரமுகர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களை பா.அரியநேத்திரன் மற்றும் பி.செல்வராசா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கி கொடுத்து இப்பிரச்சினையைத் தீர்த்து வைத்தார்.
6 minute ago
21 minute ago
2 hours ago
Hari Friday, 16 September 2011 11:51 PM
வந்திருந்த போலீஸ்காரர்களுக்கு இருந்த அளவு புத்தியாவது இந்த நிகழ்வை ஆயத்தம் செய்தவர்களுக்கு இருக்கவில்லையே. இதுதான் தமிழ் பிரதேசமொன்றில் ஒரு உயர்மட்ட கூட்டம் ஒன்று ஆயத்தம் செய்யும் ஒழுங்கு. அரசுக்கு கூஜாதூக்கும் நிலை தொடர்தால் யார் உரிமைகளை பற்றி பேசுவது தட்டை பறிக்கவேண்டியதுதான். அவர்செய்துள்ளர். goodwork
Reply : 0 0
ajmal from thanbala Saturday, 17 September 2011 12:52 AM
anku ponalu கதிரை பிரச்சினை தானா.......... மக்கள் பிரசினைய parunka முதல்............
Reply : 0 0
Ramesh Saturday, 17 September 2011 07:23 AM
இப்போது இவர்கள் ஒன்றும் மக்களுக்கு உரிமைகளை பெற்று தர போவதில்லை. இன்னும் மக்களை சூடாக்கி அரசியல் செய்ய தான் முடியும்..... போதும் அழிவுகள் எமக்கு இன்று தேவை அபிவிருத்தி தான்.
Reply : 0 0
Saleem Saturday, 17 September 2011 07:55 PM
தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளுக்கு இந்த அரசாங்கம் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
2 hours ago