2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவின் முதலாம் குறிச்சி பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் வைபவம்  நேற்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி ஆற்றங்கரை சதுக்கத்தில் நடைபெற்றது.

காத்தான்குடியிலுள்ள ஐக்கிய மக்கள் ஒன்றியத்தினால் இவ்வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.நசார் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக் கல்லூரியின் அதிபர் அப்துல்லா றஹ்மானி ஹசரத,; காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் குணவர்த்தன உட்பட பிரமுகர்கள், முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்தின் வகுப்பறைகளுக்கான சுவர்க்கடிகாரமும் வழங்கப்பட்டது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X