2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஐக்கிய அரபு இராச்சியத்தின் நிதியுதவில் பாலமுனை கிராமத்தில் வீட்டு திட்டம்

Super User   / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி, கே.எஸ்.வதனகுமார், ரி.லோஹித்)

மட்டு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை கிராமத்தில் வீட்டு திட்டமொன்றை அமைப்பதற்கான நிதியுதவியை ஐக்கிய அரபு இராச்சியம் வழங்கியுள்ளது.

நாற்பத்தைந்து வீடுகள் அமைக்கப்படவுள்ள இந்த வீட்டு திட்டத்திற்கான அடிக்கலினை இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மஹ்மூத் மொஹமட் அல் மஹ்மூத்; நாட்டி வைத்தார்.

அடுத்த வருட நடுப்பகுதியில் கட்டி முடிக்கப்படவுள்ள இந்த வீட்டு திட்டம் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள்  சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்வில் சிரேஷ்ட் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எல்.எம்.பரீட், யூ.எல்.எம்.என்.முபீன், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், ஹஸரத், மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபு கல்லூரியின் அதிபர் அப்துல்லா ஹஸ்ரத் மற்றும் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கடந்த வெள்ள அனர்த்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே இந்த வீட்டு திட்டம் நிர்மாணிக்;கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0

  • Xuva Monday, 19 September 2011 05:58 PM

    எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கருணை உங்களுக்கு உண்டாகட்டும். இன்னும் இன்னும் உங்கள் சேவைகள் தொடரட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .