2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

காத்தான்குடி சாகிரா இஸ்லாமிய அங்கவீனர் பாடசாலை குறைநிறைகள் ஆராய்வு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடி சாகிரா இஸ்லாமிய அங்கவீனர் பாடசாலைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சென்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், அங்குள்ள குறைநிறைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது இப்பாடசாலை மாணவர்களை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதற்குரிய வாகன வசதியை பெற்றுத்தருமாறு  மாகாண அமைச்சரிடம் பாடசாலை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது.

இவ்வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட  மாகாண அமைச்சர் சுபைர் வாகன வசதியை ஏற்படுத்தித் தருவதாக வாக்குறுதியளித்தார்.
மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபைர்  பாடசாலையை சுற்றி பார்வையிட்டதுடன், அங்குள்ள மாணவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--