Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
உலக உளநல தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு உளநல அபிவிருத்தி மன்றத்தினால் 'சமூக இணைவினை நோக்கி' என்ற தொனிப்பொருளிலான நிகழ்வு களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. வி.எஸ்.ஒ. நிதியொதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் 12 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலும் இந்த செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
களுவாஞ்சிகுடி சுகாதார திணைக்களத்துடன் இணைந்து களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வி.எஸ்.ஒ. அமைப்பின் தொண்டர் அலிஸ் குக், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணர் கடம்பநாதன், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் சுகுணன் உட்பட பலர் அதிதியாக கலந்துகொண்டனர்.
கிராமங்கள் தோறும் உள நலம் குன்றியவர்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும், அவர்கள் எவ்வாறு சமூகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டன. அத்துடன் ஒருவர் மன அழுத்தங்களுக்கு உட்பட்டு மனஉள வளம் தேவைப்படும்போது அவற்றை எவ்வாறு கையாள்வது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகஸ்தர்கள், கிராமத் தலைவர்கள், மதத்தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026