2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

மட்டக்களப்பில் வீதி நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் பல்வேறு வீதி அபிவிருத்தி வேலைகள் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. தொடரும் அபிவிருத்தித் திட்டங்களில் வீதி அபிவிருத்தித் திட்டங்களும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 02.11.2011 அன்று பட்டிப்பளை பிரதேசத்துக்குட்பட்ட முனைக்காடு காளி கோவில் வீதி நாகமுனைவீதி தாலையடித்தெரு எனும் வீதிகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. அதே நேரம் எதிர்வரும்  07.11.2011 மண்முனை மேற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மகிழவெட்டுவான் பாடசாலைவீதி, உன்னிச்சை 8ஆம் போஸ்ட் வீதி, நரிப்புல் தோட்டம், மகிழவெட்டுவான் வீதிகளின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட புதிய வன்னியார் வீதி, திருப்பெருந்துறை 4ஆம் குறுக்குத்தெரு, திருப்பெருந்துறை 3ஆம் குறுக்குத்தெரு வீதிகளின் நிர்மாண வேலைகளும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .