2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

ஓட்டமாவடியில் வீடுகள் கையளிக்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 நவம்பர் 17 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு சமூர்த்தி திரிய பியஸ வேலைத்திட்டத்தின் கீழ் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் இன்று வியாழக்கிழமை மக்களிடம் கையளிக்கப்பட்டன.

சமூர்த்தி திரிய பியஸ வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 4 வீடுகளும், சமூர்த்தி வீடமைப்பு சீட்டிழுப்பின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளுமாக மொத்தம் ஆறு வீடுகள் இதன்போது மக்களிடம் கையளிக்கப்பட்டன.

சமூர்த்தி மகா சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.இஸ்ஹாக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.சீ.எம்.அன்சார், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதேச சபை உறுப்பினர்கள், சமூர்த்தி வலய முகாமையாளர் எம்.எஸ்.அப்துல் ஹை,  சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .