Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2011 நவம்பர் 29 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா)
ஏறாவூர் பிரதேசத்திலுள்ள சதாம் ஹூஸைன் கிராமம் ஈராக் கிராமம் என பெயர் மாற்றப்பட்டதையடுத்து, குறித்த மக்களுக்கு உதவ தயார் என அப்பகுதிக்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஈராக் தூதுவர் கஹ்தான் தாஹா ஹலப் உறுதியளித்துள்ளார்.
உத்தியோகபூர்வமாக குறித்த கிராமத்தின் பெயர் மாற்றப்படும் பட்டசத்தில் இங்குள்ள 350 குடும்பங்களினதும் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக தலா ஒரு லட்சம் ரூபா பணம் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் இக்கிராமத்திலுள்ள பள்ளிவாசலை கட்டுவதற்கு உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஏறாவூர் நகர சபையில் பிரதி நகர பிதா எம்.ஐ.எம்.தஸ்லீம் தலைமையில் தூதுவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
இதன்போது ஏறாவூர் நகர சபை எல்லைக்குள் நடைபெறவுள்ள அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நவீன முறையிலான மடுவம் என்று அழைக்கப்படும் கொல்களத்தை அமைத்துத் தருமாறு தூதுவரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
குறித்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தூதுவர் இஸ்லாமிய முறையிலான மடுவத்தை அமைத்து தறுவதாக உறுதியளித்தார்.
இச்சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ரீ.சத்தியானந்தி, நகர சபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட தூதுவர் 350,00 ரூபா பணம் அன்பளிப்பாக வழங்கியதுடன் மாதாந்தம் இந்நிலையத்திற்கு உதவுவதாகவும் உறுதியளித்தார்.
I HILMEE Wednesday, 30 November 2011 10:59 PM
அப்படியன்றால் அவர் அமைக்கும் மசூதி சியா மசூதியா சார்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago