2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

த.ம.வி. புலிகள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைவு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் புதிதாக இணைந்து கொண்ட உறுப்பினர்களில் சிலருக்கு நேற்று கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தினால்; உறுப்புரிமை வழங்கப்பட்டது.

முன்னாள் த.ம.வி. புலிகள் கட்சயின் தலைவர் அமரர் குமாரசுவாமி நந்தகோபன் அவர்களது 4ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்புரிமை வழங்கும் நிகழ்வு அமைந்திருந்தது.
 
கடசியின் செயலாளர் பூ.பிரசாந்தன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரை அண்டிய பிரதேசங்களில் உள்ளவர்களுக்கான உறுப்புரிமை வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. சுமார் 60 புதிய உறுப்பினர்கள் இதன்போது உறுப்புரிமை பெற்றுக்கொண்டார்கள்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது கிராமங்கள் தோறும் கட்சி உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய திட்டம் ஒன்றை வகுத்து அதனூடாக கிராமங்கள் தோறும் பல உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு செல்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .