2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

சிவில் பாதுகாப்புக் குழுக்களின் பயன்பாடுகள் பற்றிய கருத்தரங்கு

Kogilavani   / 2012 நவம்பர் 16 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

'சிவில் பாதுகாப்பு தொடர்பான முன்னேற்றமும் அதன் பலாபலன்களும்' என்ற தொனிப் பொருளிலான கருத்தரங்கு கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலையிலிருந்து நண்பகல் வரை மட்டக்களப்பு தன்னாமுனை மியானி தொழினுட்ப நிலையக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக் கருத்தரங்கில் ஏறாவூர் பொலிஸ் நிர்வாகத்திற்குள் உள்ளடங்கும் ஊர்களில் அமைக்கப்பட்டுள்ள சகல சிவில் பாதுகாப்புக் குழுக்கள் பற்றிய பயன்பாடுகள் ஆராயப்பட்டதோடு எதிர்காலத்தில் சிவில் சமூகமும் பொலிஸாரும் இணைந்து எவ்வாறு பாதுகாப்பானதொரு சூழலை அமைக்கலாம் என்பது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

இதேவேளை, 'அவ்விடத்தில் சேவை' என்ற அடிப்படையில் கருத்தரங்கில் கலந்து கொண்டோரிடமிருந்து கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் வேண்டுகோளின் பேரில் முறைப்பாடுகளும் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டன.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக சிவில் சமூகமும் பொலிஸாரும் பரஸ்பரம் இணைந்து செயலாற்ற வேண்டியதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கருத்தரங்கில் சிவில் சமூக பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள், அரச உயரதிகாரிகள், சர்வதேச நிறுவனமான ஆசிய பவுண்டேசன் உட்பட பல அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமய பெரியார்கள், பொலிஸ் உயர் மட்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .