2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

மொழிச்சங்க உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 28 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மாற்றுக்கொள்கைக்கான நிலையத்தின்  கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் மொழிச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு இளைஞர் கிறிஸ்தவ சம்மேளனத்தின் அலுவலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

மாற்றுக்கொள்கைக்கான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான இணைப்பாளர்களான வடிவேல் ரமேஸ் ஆனந்தன்,  மங்கலேஸ்வரி ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்றுகூடலில் மாவட்டத்தில் இயங்கிவரும் மொழிச் சங்கங்களின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த ஒன்றுகூடலில் மாற்றுக்கொள்கைக்கான நிலையத்தின் ஆலோசகரும் சட்டத்தரணியுமான எஸ்.ஜீ புஞ்சிஹேவா, பிரதான இணைப்பாளரான லயனல் குருகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X