2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வறுமைகோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜூலை 29 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.ருத்திரன்
, எம்.முர்ஷித்

மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் வறுமைகோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வாகரை பொலிஸ் பரிசோதகர் பாலித்த ஜெயரட்னாவின தலமையில்  இன்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் 25 மாணவர்களுக்கு புலiமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

இதன்போது கிழக்கு மாகாணத்திற்;கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அதிகாரி மெவன் சில்வா, பிரதேச செயலாளர் ஆர்,இராகுலநாயகி, உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய வாகரை பொலிஸ் பரிசோதகர் பாலித்த ஜெயரட்ன, 

'இத்திட்டத்தின் மூலம் தெரிவுசெய்யப்படும் மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று கல்வி பயிலும்காலம் வரை அவர்களுக்கான உதவி வழங்க்கப்படும்.

எதிர்காலத்தில் மேலும் பல மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு மேற்படி உதவி வழங்கப்படும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--