2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


ஊக்குவிப்பு உற்பத்தித்திறன் விருத்தி அமைச்சினால் மாவட்டங்கள் தோறும் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச துறைகளுக்கான உற்பத்தி திறன் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊக்குவிப்பு உற்பத்தித்திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூதின் ஆலோசனையின் பேரில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் செயலமர்வொன்று மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நேற்று (24.10.2013) அரச அதிகாரிகளுக்கு நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன், அமைச்சின் மக்கள் தொடர்பாடல் இணைப்பதிகாரி யு.எல்.எம்.என்.முபீன், உதவி மாவட்ட செயலாளர் கே.ரங்கநாதன், தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.சுகத் உட்பட பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 78 அரச துறை நிறுவனங்களில் இருந்து 180 பதவி நிலை உத்தியோகத்தர்கள் இந்த செயலமர்வில் பங்கேற்றனர்.

இதன்போது தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் வளவாளர் வி.பிரகாஸ் விரிவுரைகளை நிகழ்த்தினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--