2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

பாலர் பாடசாலைகளில் வலைப்பின்னல் ஆரம்பிக்கும் கூட்டம்

Kogilavani   / 2014 மார்ச் 27 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் பாலர் பாடசாலைகளின் வலைப்பின்னல் ஆரம்பிக்கும் கூட்டம் புதன்கிழமை (26) நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற  இக்கூட்டத்தில், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் மற்றும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டு பணிப்பாளர் ஏ.எல்.இப்றாகீம், பணியகத்தின் வெளிக்கள உத்தியேகாத்தர் எம்.மாஹீர், பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.றஹ்மத்துல்லாஹ், சமுர்த்தி முகாமையாளர் இ.குணரட்ணம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன் பாது காத்தான்குடி பிரதேச பாலர்பாடசாலைகளின் வலைப்பின்னலின் தலைவராக காத்தான்குடி பிரதேச செயலாளரும், அதன் செயலாளராக பணியகத்தின் வெளிக்கள உத்தியேகாத்தர் எம்.மாஹீரும் தெரிவு செய்யப்பட்டனர். இதன் போது 11 பேர் கொண்ட குழு  அமைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தினால் பிரதேச மட்டத்தில் பாலர் பாடசாலைகளை ஒன்றிணைக்கும் பாலர் பாடசாலைகளின் வலைப்பின்னல் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.

இந்நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கல்வி வலய அலுவலகப் பிரிவுகளாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .