2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் நிலையங்களில் ஊடகப் பிரிவுகள்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்

பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோனின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோகணவின் வழிகாட்டலில் மாவட்டந்தோறும் ஊடக பிரிவுகள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்டத்திற்கான ஊடக நிலையம், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையில் திறக்கப்படவுள்ளது. இம்மாத இறுதியில் இந்நிலையம் திறக்கப்படவுள்ளதாக நிலையத்தின் உதவி பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பொலிஸ் இன்ஸ்பெக்டர் கே.சில்வாவும் உதவி பொறுப்பதிகாரியாக சார்ஜன்ட் ஏ.எ;.ஹிதாயதுல்லாஹ்வும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்திலுள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுடன் நெருக்கமான உறவினைப்பேணி அதனூடாக நம்பகத்தன்மையான தகவல்களை மக்களுக்கு வழங்குவலதே இதன் நோக்கமென அவர் மேலும் தெரிவித்தார்.

மாவட்ட பொலிஸ் ஊடக பிரிவு திறப்பு விழாவில் பொலிஸ் ஊடக பேச்சாளரும் கலந்துகொள்வாரென தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .