2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

ஜெய்க்கா பிரதிநிதிகள் களுவாஞ்சிகுடிக்கு விஜயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


ஜப்பான் மற்றும் ஜெய்க்கா பிரதிநிதிகள்  களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு   சனிக்கிழமை(19) விஜயம் செய்துள்ளனர்.

இதன் போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் உள்ளிட்ட குழு இவ்வைத்தியசாலையின் பௌதீக  விடயங்கள் பற்றி கலந்துரையாடியுள்ளதுடன்  அங்கு இடம்பெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிகழ்விற்கு ஜப்பான் நாட்டின் பிரதிநிதி அசோகோ ஓகேஸ் மற்றும் ஜெய்க்கா நிறுவனத்தின் கியோசி அமோடா  மற்றும் யப்பான் நாட்டின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--