2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கிழக்குப் பல்கலைக்கழக கட்டட திறப்புவிழாவில் ஜனாதிபதி

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 19 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு இன்று (19) மாலை விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள 555 மில்லியன் ரூபாய் பெறுமதியான பல்வேறு கட்டிடத் தொகுதிகளையும் திறந்து வைத்தார்.

இந்த அபிவிருத்தித் திட்டங்களில், 230 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வர்த்தக முகாமைத்துவ பீட கட்டிடத் தொகுதி, 171 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரதான நூலக கட்டிடத் தொகுதி, 121 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கலை கலாசார பீட கட்டிடத் தொகுதி, 25 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உள்ளக உடற்பயிற்சி அரங்கு, 7 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய நுழைவாயில் என்பனவற்றை ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்.

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணண் கோபிந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க மற்றும் உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத், மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் வி. முரளிதரன், பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம, கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசார் எம்.எஸ். சுபைர்,  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவி பேராசிரியை திருமதி சானிகா ஹிரும்புரேகம மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், அலுவலர்கள் உட்பட இன்னும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கிழக்குப் பல்கலைக்கத்திற்கு உபவேந்தராக கலாநிதி கிட்ணண் கோபிந்தராஜா நியமிக்கப்பட்டதன் பின்னர் பௌதீக, கல்வி மேம்பாடு கருதி மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் ஒருபகுதியாக இந்தக் கட்டிடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன.

230 மில்லியன் ரூபாய் எனும் அதிகூடிய செலவில் அமைக்கப்பட்டு இன்று ஜனாதிபதியினால் தறிந்து வைக்கப்பட்ட வர்த்தக முகாமைத்துவ பீட கட்டிடத் தொகுதி கடந்த 2009.02.09 அன்று பீடாதிபதியாக இருந்த ஏ. அன்ரூவ் அவர்களினால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அடுத்து வரும் 20 வருடங்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு தேவையான நவீன இடவசதிகளுடன் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--