2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

விழிப்புணர்வு கருத்தரங்கு

Kogilavani   / 2014 ஜூலை 04 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 4வது பகுதி மாணவர்களை உள்வாங்குவதற்கான விழிப்பணர்வுக் கருத்தரங்கு கல்லூரியின் பணிப்பாளர் கே.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மண்முறைப்பற்று பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், கல்லூரியின் வழிகாட்டல் ஆலோசகரும், ஐயுநுடுளு ஆங்கிலகற்கை நிறுவகத்தின் பணிப்பாளரும், சமூகவிஞ்ஞானதுறை விரிவுரையாளருமாகிய எஸ்.சசிதரன், 'Berendina Employment Centre'  இன் மாவட்ட முகாமையாளர் ஜே.ஜே.வி.நிறோஷ், சமூகநலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு, இணைப்பாளர் ரா.சசிகலா, மண்முனைப் பற்றுபிரதேச செயலகத்தின் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் யு.சுரேஸ்குமார், கல்லூரியின் போதனாசிரியர் ஆர்.குலதீஸ்  மற்றும் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலர்  கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், கலந்துகொண்ட மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் கருத்து தெரிவிக்கையில்,

'தற்போது பாடசாலைக் கல்வியினைப் பூர்த்திசெய்த,  இடைவிலகிய பல்கலைக்கழகம் செல்ல முடியாத பல இளைஞர், யுவதிகள் பல்வேறுமன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன் காரணமாக பல குற்றச்செயல்கள் உருவாகின்றன. எனவே, அவர்களுக்கு இவ்வாறன பயிற்சிகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள் மிக அவசியமானது.

இவ்வாறான மாணவர்கள் எல்லோரையும் அரச தொழில் பயிற்சி நிறுவனங்களால் முற்றாக பொறுப்பேற்க முடியாததால் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவானது இவ்வாறான தனியார் கல்லூரிகளுக்கும் அங்கீகாரம் அளித்து இம் மாணவர்களுக்கான தொழில் பயிற்சியிகளை வழங்கி வருகின்றது,

அந்தவகையில் சுவாமிவிவேகானந்தரின் பெயரில் சிறந்த சூழலில் இக்கல்லூரி அமைந்து எமது பிரதேசத்தில் சிறப்பாக தனது சேவையை ஆற்றி வருவது பெருமைப்படத்தக்கது' என்றார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .