2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் சுஹதாக்கள் தினம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடியில் 03.8.1990ஆம் ஆண்டு இடம்பெற்ற பள்ளிவாசல் படுகொலையில் உயிரிழந்தவர்களின்  25ஆவது வருட சுஹதாக்கள் தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

இதையொட்டி, காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹுஸைனிய்யா பள்ளிவாசலில் உயிரிழந்தவர்களின் நினைவாக குர்ஆன் ஓதப்பட்டது.

இதில் உலமாக்கள், ஹுஸைனிய்யா பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

03.08.1990 அன்று இரவு  காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹுஸைனிய்யா பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களிலும் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் குண்டுத் தாக்குதலில் 103 பேர்; படுகொலை செய்யப்பட்டதுடன், 45 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .