Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
 -எம்.எஸ்.எம்.நூர்தீன்
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைப் பயன்படுத்தி எம்மை தோல்வியடையச் செய்ய முயற்சிக்கின்றனர் என முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளருமான எ.எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி பஸ் டிப்போஅருகில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,
இப்பிரதேசத்தில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்ய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள் இருவர் கடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை பயன்படுத்தி எம்மை தோல்வியடையச் செய்ய இவர்கள் முயற்சிக்கின்றனர்.
நாம் செய்த அபிவிருத்திகளை கொச்சைப்படுத்தி எதுவும் செய்யடி வில்லை என பொய் சொல்கின்றனர். அவர்களுக்கு என்ன நடந்தது என கேட்கவிரும்புகிறேன்.
காத்தான்குடிஅபிவிருத்தியை போல சம்மாந்துறையையும் அபிவிருத்தி செய்யவேண்டும் என வேட்பாளர் கலாநிதி இஸ்மாயில் தெரிவித்துள்ளார். அதேபோல் கல்முனையை அபிவிருத்தி செய்யவெண்டும் என ஹரீஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் இவர்களுக்கு மட்டும் ஏன் அவ்வாறு சொன்னால் பிடிப்பதில்லை எனகேட்க விரும்புகிறேன் என்றார்.
25 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago