2021 மார்ச் 01, திங்கட்கிழமை

'பெற்றோரின் பங்களிப்பு' கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பாடசாலை அபிவிருத்தி முகாமைத்துவத்தில் சிவில் சமூகமான பெற்றோர்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடலொன்று இன்று  வெள்ளிக்கிழமை காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

சொலிடாரி லைக் நிறுவனத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் கீழுள்ள கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஒன்பது வலயக் கல்வி அலுவலகங்களின் கல்வி அதிகாரிகள் கோட்டக்கல்வி அதிகாரிகள் பெற்றோர் கலந்து கொண்டனர்.

பாடசாலை அபிவிருத்தி முகாமைத்துவத்தில் சிவில் சமூகமான பெற்றோர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். இதை வலுப்படுத்தும் வேலைத்திட்டமாக இந்த வேலைத்திட்டம் இடம்பெறுவதாக இதன் ஏற்பாட்டாளர் சொலிடாரி லைக் நிறுவனத்தின் ஆலோசகர் அய்யாஸ் கிதாயத்துல்லாஹ் இதன்போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .