Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 22 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு சிறுவர் நிதியத்தினால் மேற்கொள்ளப்படும் இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் வேலைத் திட்டத்தின் ஒருபகுதியாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வவுணதீவில் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் சந்தையினூடாக 310 இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொண்டுள்ளனர்.
250 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டலை மேற்கொண்டு தொழிலை பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டத்தினை மேற்கொள்ளும் சிறுவர் நிதியம் ஏற்கனவே 50 இளைஞர்களுக்கு வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுப்பதற்கான பயிற்சியினை வழங்கி வந்த நிலையிலேயே ஏனைய 200 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க இந்த தொழில் சந்தையினை ஏற்பாடு செய்திருந்தது.
மட்டக்களப்பு, கொழும்பு போன்ற இடங்களில் இருந்து வருகைதந்த கம்பனிகள் இவர்களை தமது நிறுவனங்களின் வேலைக்கு தெரிவு செய்துள்ளனர். மேற்படி இளைஞர்களை விரைவில் தொழிலுக்கு இணைத்துக்கொள்ளவுள்ளதாக சிறுவர் நிதிய திட்ட அதிகாரி ஏ.எச்.அலெக்சாண்டர் தெரிவித்தார்.
தொழில் சந்தை ஆரம்ப நிகழ்வில் சிறுவர் நிதிய தேசிய பணிப்பாளர் குருநாயக்க, சிறுவர் நிதியத்தின் கொறியா பிரதிநிதி சைன் மூன், வவுணதீவுப் பிரதேச செயலாளர் என்.வில்வரத்தினம், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக விவசாய கைத்தொழில் சம்மேளனத் தலைவர் கே.ரஞ்சிதமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago
05 Jul 2025