2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் 42.0 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 16 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,ஜிப்ரான்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமையிலிருந்து மழை பெய்துவருகின்ற நிலையில், இந்த மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிவரை 42.0 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.

இந்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று வெள்ளிக்கிழமை காலைவரைக்கும் 130.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளன.  இந்த ஆண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் இன்று வெள்ளிக்கிழமை காலை வரைக்கும் 890.3 மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த மழை காரணமாக வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளன. படங்கள்:-ஜிப்ரான்



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .