2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

மட்டு. மாவட்டத்தில் முழுமையாக சேதமடைந்த வீடுகளை திருத்த 45 மில்லியன் ஒதுக்கீடு: அமைச்சர் பஷில்

Super User   / 2011 ஜனவரி 15 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி, கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்காக அரசாங்கம் 45 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைiயில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் பிரதியமைச்சர்களான வீ.முரளிதரன், ஹிஸ்புல்லா, பசீர் சேகுதாவூத், திலீப் விஜயசேகர, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், இந்திய தூதுவர் அசோக் கே. காந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்காக அரசாங்கம் 4 மில்லியன் ரூபாவை நிதியொதுக்கீடு செய்துள்ளது.

அதேபோன்று சேதமடைந்த வீதிகள், பாலங்கள் மற்றும் குளங்கள் என்பவற்றையும் அரசாங்கம் புனரமைக்கும். மக்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் துரிதமாக வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதையடுத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தாழங்குடா விநாயகர் வித்தியாலயம், காங்கேயனோடை அல் அக்ஷா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தங்கியள்ள மக்களையும் பார்வையிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .