2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் 4,82,830 பேர் பாதிப்பு

Super User   / 2011 ஜனவரி 09 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோர் தொகை 4,82,830 ஆக அதிகரித்துள்ளதென மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க  அதிபர் கே.விமலநாதன் தெரிவித்தார்.

127,980 குடும்பங்களைச் சேர்ந்தோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் 146 நலன்  புரி நிலையங்களில் 14,549 குடும்பங்களைச்சேர்ந்த 55,345 பேர் தங்கியுள்ளதாகவும் 47,656 குடும்பங்களைச்சேர்ந்த 179,976 பேர் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மேலும்  தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--