2021 மே 18, செவ்வாய்க்கிழமை

வவுணதீவு பிரதேச அபிவிருத்திக்கு ரூ.53 மில்லியன் ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார், ரி.லோஹித்)

வவுணதீவுப் பிரதேச அபிவிருத்திக்கு 53 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு அதனை செலவு செய்வதற்கான அனுமதி நேற்று நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பெறப்பட்டது.

வவுணதீவுப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அபிவிருத்திக் குழுத் தலைவர் பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றபோது இதற்கான அனுமதி பெறப்பட்டது.

இந்த 53 மில்லியனில் திவிகம திட்டத்திற்கு 9.3 மில்லியனும் கமநகும திட்டத்திற்கு 33 மில்லியனும் சமூர்த்தித் திட்டத்திற்கு 10.7 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் மற்றும் பஷீர் சேகுதாவூத், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், எ.சி.கிருஸ்ணானந்தராசா ஆகியோரது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி மற்றம் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டு வேலைத் திட்டங்களுக்கான அனுமதியும் இதன்போது வழங்கப்பட்டது.

அனைத்து நிதிக்குரிய வேலைத்திட்டங்களையும் டிசம்பர் மாதத்துக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று பிரதி அமைச்சர் உத்தரவிட்டார்.

வவுணதீவுப் பிரதேச செயலாளர் என்.வில்வரத்தினத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன்,  மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், எ.சி.கிருஸ்ணானந்தராசா மற்றும் திணைக்களத் தலைவர்கள் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .