2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

சுழல் காற்றினால் 63 வீடுகள் சேதம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.அப்துல் ஹுஸைன்,தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய சுழல் காற்றினால்  63 வீடுகள் சேதமடைந்துள்ளன. 

இங்கு 15 வீடுகள் முழுமையாகவும்  48 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

கரடியானாறு பிரதேசத்தில்  10 வீடுகள் முழுமையாகவும்  7 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. மரப்பாலம் பிரதேசத்தில் 5 வீடுகள் முழுமையாகவும் 37 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.  கித்துள் பிரதேசத்தில்  4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட வீடுகளை ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் உள்ளிட்டோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர். (படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன்)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--