Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தேசிய இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, இந்து சமய அறநெறிகள் கல்வி கொடி தினம், மட்டக்களப்பில் நேற்று (10) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமாருக்கு, இந்து சமய கலாசார உத்தியோகத்தர் எஸ். குணநாயகம், கொடியை அணிவித்து, கொடிவாரத்தை ஆரம்பித்து வைத்தார்.
இந்து சமயத்தின் அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக தேசிய இந்து சமய அறநெறிக்கல்வி கொடி வாரம் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு தேசிய இந்து சமய அறநெறிக்கல்வி கொடி விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற 59 இலட்சத்து 97 ஆயிரத்து 663 ரூபாய் நிதியினுடாகப் பலதரப்பட்ட அறநெறி செயற்பாட்டை செய்துவந்தாகவும் மாவட்டத்திலுள்ள 17 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டதுடன், பாடசாலை உபகரணங்கள், கற்றல் உபகரணங்கள் என சகலவிதமான உதவிகளையும் இதனுடாக ஆற்ற முடிந்துள்ளது எனவும் அறநெறிக் கல்விப் பிரிவினர் தெரிவித்தனர்.
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago