Editorial / 2017 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:40 - 1 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் அழைப்பின் பேரில் வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டடத்தை, இன்று (20) திறந்து வைத்தார்.
மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முன்னாள் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சராக இருந்தபோது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் ஒதுக்கப்பட்ட சுமார் 50 மில்லியன் ரூபாய் செலவில் இக்கட்டடம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வின், சிறப்பு அதிதிகளாக அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ஜோன் அமரதுங்க, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் கலபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதிய கட்டடத்தின் நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வை, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆகியோர் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




7 minute ago
33 minute ago
42 minute ago
Farveez Sunday, 20 August 2017 02:00 PM
பக்கத்துக்கு வீட்டு கோழியை அறுத்து உம்மா பெயரில் கந்தூரி கொடுக்கும் வெட்கம் கெட்ட முஸ்லிம் காங்கிரஸ் ... உங்களது நிதியில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டதா...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
33 minute ago
42 minute ago