2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

‘தியாகச்சுடர்’ திலீபனின் நினைவு

வா.கிருஸ்ணா   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“தியாகச்சுடர்” திலீபன் 32ஆவது ஆண்டு ​நினைவு நிகழ்வுகளின் ஆரம்ப நாள் நிகழ்வு, மட்டக்களப்பு – வெல்லாவெளி, ஜனநாயகப் போராளிகள் கட்சி அலுவலகத்தில், இன்று (15) நடைபெற்றது.

இதன்போது, நினைவுச்சுடர் ஏற்றி, தியாகி திலீபனின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதித் தலைவருமான பா.அரியநேத்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட ஊடகப்பேச்சாளர் ப.சாந்தன், நிர்வாகப் பொறுப்பாளர் நா.தீபன் உட்பட பலரும் மலர்அஞ்சலி செலுத்தினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .