2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர், ஆளுநருடன் சந்திப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தியாகராஜா சரவணபவன், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை, மட்டக்களப்பிலுள்ள ஆளுநர் விடுதியில், இன்று (19) சந்தித்துக் கலந்துரையாடினார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகள் தொடர்பிலும், சிறந்த அரச அதிகாரிகளைக் கொண்ட நிர்வாக சேவைகள் மூலம், பொதுமக்கள் பயன்பெற வேண்டும் தொடர்பிலான விடயங்களை, ஆளுநர் இதன்போது, மேயருக்குத் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி, மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் முன்னேற்றமடையச் செய்வதற்கான புதிய திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன .

இச்சந்திப்பில், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் மணிவண்ணனும் பங்கேற்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .