Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.எல்.ஜௌபர்கான்)
கரடியனாறு வெடிப்புச் சம்பவத்தில் பலியான பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழுமையான துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வர்த்தக நிலையங்கள், நிறுவனங்களில் வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டு மரணமானவர் குடும்பங்களின் துக்கத்தில் பங்கெடுக்குமாறு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி மக்களைக் கேட்டுள்ளது.
ரி.எம்.வி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பி.பிரசாந்தன் இது தொடர்பான அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்துக்கு உட்பட்ட செங்கலடி, வாழைச்சேனை, ஆரையம்பதி உட்பட பல இடங்களில் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago