2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

சுயேட்சை வேட்பாளர்கள் ஐ.தே.கவில் இணைவு

Super User   / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

ஏறாவூர் நகர சபை தேர்தலில் ஆறாம் இலக்க சுயேட்சை குழுவில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் ஐக்கிய தேசிய கட்சியில் இன்று திங்கட்கிழமை இணைந்துகொண்டனர்.

மட்டக்களப்பிலுள்ள ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்திலேயே அவர்கள் இணைந்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் கரு ஜயசூரிய, செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான அரசரட்னம் சசிதரன் மற்றும் எம்.மாசிலாமணி உட்பட பலர் கலந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

குறித்த சுயேட்சைக்குழுவின் தலைமை வேட்பாளர் எம்.எப்.பாறூக் ஐக்கிய தேசிய கட்சியின் ஒப்பந்த படிவத்தில் கையொப்பமிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X