Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஜனவரி 18, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்,ஸரீபா)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்தானை களுவாமடு பகுதியில் யானை தாக்கியதில் விவசாயிகள் இருவர்; பலியாகியுள்ளனர்.
வாழைச்சேனை செம்மண்ணோடை பிரதேசத்தைச் சேர்ந்த நெய்னா முகம்மது முஸ்தபா லெப்பை (வயது 65), முகம்மது இஸ்மாயில் இப்றாகிம் (வயது 36) ஆகிய இருவருமே இச்சம்பவத்தில் பலியானவர்கள் ஆவர்.
நேற்று புதன்கிழமை இரவு பொத்தானை களுவாமடு பகுதியிலுள்ள வயலில் வேலைகளில் ஈடுபட்டிருந்த 7 பேரும் ஒரு பகுதி வயல் வேலையை முடித்துவிட்டு உறங்கிக்கொண்டிருந்த வேளையிலேயே இவர்களை யானை தாக்கியுள்ளது. யானைத் தாக்குதலில் இருவர் பலியான நிலையில், ஏனைய ஐந்து பேரும் ஓடி தங்களது உயிர்களை பாதுகாத்துக்கொண்டனர்.
இந்த யானை தாக்கிய சம்பவத்தில் பலியானவர்களின் சடலங்கள் வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன் இன்று காலை மீட்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
5 hours ago
6 hours ago
7 hours ago