Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 10 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி இரண்டாம் வட்டாரத்தில் ஜீ.எஸ். வீதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீளெழுச்சித் திட்டத்தின் கீழ் வடிகான் அமைக்கப்பட்டு அவ்வீதி கொங்கிறீட் வீதியாக அமையப்பெறவுள்ளது. வடிகானுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மீளெழுச்சித் திட்டத்தின் கீழ் 430,000 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஓட்டமாவடி பிரதேசசபை உறுப்பினர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
ஓட்டமாவடி பிரதேசசபைத் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago