2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

இளைய வளர்ப்பு வாழைகள் நடுகைத்திட்டம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2013 ஜூலை 24 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


திவிநெகும திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று புதன்கிழமை முதன் முதலாக இளைய வளர்ப்பு வாழைகள் நடுகைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் வழிகாட்டலில், இலங்கை வர்த்தக கைத்தொழில் சம்மேளனங்களின் ஒன்றியத்தின் அனுசரணையில் இவ் இளைய வளர்ப்பு வாழைகள் மட்டக்களப்பில் நடுகை பண்ணப்படுகின்றன.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஹம்பாந்தோட்டை வெலியத்தை ஆராய்ச்சி  நிலையத்துடன் இணைந்து இந்த வாழை வளர்ப்பு நடைபெறவுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.மோகன்ராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு விவசாயிகள் விடுத்த வேண்டுகோழுக்கிணங்க இந்த இளைய வாழைகள் வளர்ப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீர்ப்பாசனத் திணைக்களமானது 1200 கன்றுகளை விவசாயிகள் ஒன்பது பேர், மற்றும் மாவட்ட செயலகம் என்பவற்றுக்கு பகிர்ந்தளித்துள்ளதாக மட்டக்களப்பு நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.மோகன்ராஜா தெரிவித்தார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .