2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

உணவகத்திற்கு சீல் வைப்பு

Super User   / 2013 ஒக்டோபர் 26 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, முறக்கட்டஞ்சேனையிலுள்ள உணவகமொன்றிற்கு சுகாதார அதிகாரிகளினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்தின் உணவு நஞ்சானமையில் 16 பேர் கடந்த திங்கட்கிழமை திடீர் சுகவீனற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து குறிப்பிட்ட உணவகம் அண்மையில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது என கிரான் பொதுச்சுகாதார பரிசோதாகர் எஸ்.நித்தியராஜ் தெரிவித்தார்.

இதேவேளை, திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் வாந்தி மற்றும் மலம் என்பனவும் கொழும்பிலுள்ள மருத்து பகுப்பாய்வு நிலையத்திற்கு பரிசோதனைக்கான அனுப்பப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--