2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

இரு வீடுகளில் வெடிப்புகள் ; 9 பேர் வெளியேற்றம்

Kogilavani   / 2017 ஜூன் 02 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

தொடர் மழை காரணமாக, கொட்டகலை யூலிபீல்ட் தோட்டம், வெலிங்டன் பிரிவிலுள்ள இரு வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதனால், அவ்வீடுகளில் வசித்து வந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 9 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உலருணவு மற்றும் தேவையான வசதிகளை கிராம அதிகாரி வழங்கி வருகின்றார்.

எனினும், தோட்ட நிர்வாகம் தமக்கு எவ்வித மாற்று நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை எனவும், நிவாரண உதவிகளையும் செய்யவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் உடனடியாக இதற்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்” என இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X