Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
கு. புஷ்பராஜ் / 2017 மே 24 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகளை, கட்டுமானப் பணியாளர்களுக்கு ஒப்படைக்காது, பாடசாலைகளின் அதிபர்கள் தாமே முன்னின்று செய்வதால், மாணவர்களின் கல்வி பாதிப்படைந்துள்ளதாக, பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக மலையகத்தில் ஒரு சில கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளில், இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பெற்றோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள பெற்றோர்,
“ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அநேகமான பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைகளின் ஒப்பந்தக்காரர்களாக, அதிபர்களே செயற்பட்டு வருகின்றனர்.
தற்போது அதிபர்களுக்கு, பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியைவிட, ஒப்பந்த மோகமே அதிகரித்துள்ளது. ஒப்பந்த வேலைகளுக்கு அதிக நேரத்தை, செலவிடுவதால் மாணவர்களின் கல்வி பாதிப்படைகின்றது.
ஒப்பந்த வேலைகளை செய்து முடிப்பதற்கு போதிய பணம் இல்லாதபோது, முற்பணங்களை பெற்று சிறிதுசிறிதாக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதால், அபிவிருத்திப் பணிகள் ஆமை வேகத்திலேயே இடம்பெறுகின்றன.
அபிவிருத்திப் பணிகள் மந்தகதியில் இடம்பெறுவதால், மாணவர்கள் வகுப்பறைகளுக்கு வெளியிலிருந்தே படிக்க நேரிடுகின்றது. அபிவிருத்திப் பணியில் ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படுவதால் குறித்த ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களில் மாணவர்கள் குறைவான பெறுபேறுகளையே பெறுகின்றனர்.
எனவே, பாடசாலைகளில் பெறுபேற்று வீதம் குறைவடைவதற்கு இதுவும் ஒரு காரணமாகின்றது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என, பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago