Kogilavani / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
ஓல்டன்- ஹட்டன் பாதையில், அரச போக்குவரத்து சேவையை விரிவுபடுத்துமாறு, மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி உபதலைவருமான எஸ்.சுரேஸ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
ஹோல்டன் - சாமிமலை பாதையூடான அரச போக்குவரத்து, உரிய முறையில் இடம்பெறாததால் பாடசாலை மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் சாடியுள்ளார்.
சாமிமலைக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து, அதிகளவான பாடசாலை மாணவர்கள், ஸ்டொக்ஹோம் பாரதி த.வி, நோர்வூட் த.ம.வி மற்றும் ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி, பொஸ்கோ கல்லூரிகளில் கல்வி கற்று வருகின்றனர் எனச் சுட்டிக்காட்டிய அவர், இந்தக் கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்கள், தனியார் பஸ்களில், பெரும் இடநெருக்கடிக்கு மத்தியிலேயே, பயணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த வழிதடத்தின் வழியாக, அதிகளவான தனியார் பஸ்களே, சேவையில் ஈடுபடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலை மாணவர்களின் நலன் கருதியேனும் அரச பஸ் சேவையை, இந்தப் பகுதியில் விரிவுபடுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில், அம்பகமுவ பிரதேச இணைப்புக்குழுவின் இணைத் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கே.கே.பியதாசவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இ.போ.சவின் ஹட்டன் டிப்போ அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், தவறும்பட்சத்தில், இவ்விடயத்தை ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டு செல்லவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026