2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘கண்டி தபால்நிலையம் பாதுகாக்கப்படும்’

Yuganthini   / 2017 ஜூலை 16 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி நகரிலுள்ள காலனித்துவக்கால தபால்நிலையம், உலக வங்கித் திட்டத்தின் கீழ், பாதுகாக்கப்படவுள்ளது. கண்டி நகர் பாரம்பரிய குழுவின் கூட்டத்தில் இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.   

அண்மையில் நடைபெற்ற கண்டி நகர் பாரம்பரிய கூட்டத்தின்போது, உலக வங்கியின் முன்மொழிவைக் கொண்ட ஓர் அறிக்கை, நகரசபை ஆணையாளரால் சமர்ப்பிக்கப்பட்டது.  
கண்டி நகருக்கு வருவோரை வெகுவாக ஈர்க்கும் ஒரு வரலாற்றுத் தளமாக, கண்டி தபால் நிலையம் அமைந்துள்ளதால், அதனைப் பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளதாக, உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .