2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

கந்தப்பளை தோட்டத் தொழிலாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

Kogilavani   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

நுவரெலியா, கந்தப்பளை உடபுஸ்ஸல்லாவை பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தோட்டத் தொழிலாளர்கள், முன்னெடுத்துவரும் பணிப்பகிஷ்கரிப்பு, 11 ஆவது நாளாகவும், இன்று (19) தொடர்ந்தது.

இப்போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப-தலைவர் கணபதி நகுலேஸ்வரன்,
இம்மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில், சனிக்கிழமையன்று (17) நுவரெலியாவில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில், எமது தொழிற்சங்கமான தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய தொழிற்சங்கங்களின் தோட்டக் கமிட்டித் தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.

தோட்ட முகாமையாளரை இந்த தோட்டத்திலிருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என தோட்டத் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இவ்விடயம் தொடர்பாக, உடபுஸ்ஸல்லாவை பெருந்தோட்ட கம்பனியின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷாந்த் ரத்வத்தையுடன் தொடர்புகொண்டு எமது கோரிக்கைகளை முன்வைத்தபோது, முகாமையாளரை உடனடியாக இடமாற்றம் செய்வதாகவும் அதற்கு பதிலாக, ஒருவரை தற்காலிகமாக நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும கூறினார்.
ஏனைய விடயங்கள், தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இன்றைய தினம் பேச்சுவார்த்தை ஒன்று நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. அத்துடன், தொழிலாளர்கள், வேலைக்கு செல்வர் எனவும் தீர்மானிக்கப்பட்டதுடன், அந்த தீர்மானத்தை அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், இன்று (19) காலையில் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பவில்லை என அறியக்கிடைத்தது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--